நாமக்கல் கோட்டத்தில் மின் தடை புகார்களை போன் மூலம் செய்யலாம்

நாமக்கல் கோட்டத்தில் மின் தடை புகார்களை   போன் மூலம்  செய்யலாம்

தமிழ்நாடு  மின்சார  வாரியம்  

நாமக்கல் கோட்டத்தில் ஏற்படும் மின் தடை விபரங்களை போன் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரத் தடை ஏற்பட்டால் ஆட்டோமேட்டிக் மின் தடை நீக்கி மையத்திற்கு போன் செய்து புகார் செய்யலாம்.

இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நாமக்கல் கோட்ட பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க வசதியாக கடந்த 2018 ஆகஸ்ட் 26 முதல் ஆட்டோமேட்டிக் மின்தடை நீக்கி மையம் மற்றும் வாட்ஸ் அப் ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் பெருவாரியான பொதுமக்களுக்கு இவ்வசதி பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை. எனவே, நாமக்கல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள நாமக்கல் துணை மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் மின்தடை நிவர்த்தி மையத்தை 1912 அல்லது, 1800 - 425 - 19124 மற்றும் 04286 - 221912 ஆகிய டெலிபோன் நம்பர்களில் தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிவித்தால் உடனடியாக பதிவு செய்யப்பட்டு வரிசைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Read MoreRead Less
Next Story