/* */

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை சரிவு!

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது!

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை சரிவு!
X

கோப்பு படம் : நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை ரூ. 5.60

நாமக்கல்,

ஆந்திர மாநிலத்தில் முட்டை விலை சரிவடைந்ததால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா குறைந்து ஒரு முட்டை விலை ரூ. 5.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும், 6 கோடி முட்டைக் கோழிகள் மூலம், தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மே 1ம் தேதி, ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ. 420 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து முட்டை விலை படிப்படியாக உயர்ந்து 18ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 16 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.60 உயர்ந்ததால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை, நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: ஆந்திராவில் உள்ள ஹைதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் முட்டை விலை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் என்இசிசி விலையை விட ஒரு முட்டைக்கு 50 பைசா குறைவாக வியாபாரிகள் கொள்முதல் செய்ய துவங்கியதால், முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, ஒரு முட்டைக்கு 20 பைசா குறைக்கப்பட்டுள்ளது. வரும், ஜூன் 1 முதல், கேரளாவில் மீன்பிடி தடைகாலம் துவங்கி, 45 நாட்கள் நீடிக்கும். ஜூன் 6 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதாலும், ஜூன் 15 முதல், ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும், இரண்டு வாரங்களுக்குப் பின், முட்டை கொள்முதல் விலை உயரும் வாய்ப்பு உள்ளத என அவர் கூறினார்.

Updated On: 27 May 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு