குமாரபாளையம் அருகே 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது, லாரி பறிமுதல்

குமாரபாளையம் அருகே 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது, லாரி பறிமுதல்
குமாரபாளையம் பகுதியில் 1.5 டன் எடையுள்ள ரேசன் அரிசி கடத்திய லாரியை, போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

குமாரபாளையம் பகுதியில் 1.5 டன் எடையுள்ள ரேசன் அரிசி கடத்திய லாரியை, போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில், ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, எஸ்.ஐ. அகிலன் தலைமையில், சிறப்பு எஸ்.ஐ., சத்தியபிரபு, போலீசார் வெற்றிவேல், ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், குமாரபாளையம் கோட்டைமேடு ஜங்சன் அருகில், அதிகாலை 5.30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 30 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

குமாரபாளையம் ஹைஸ்கூல் ரோட்டை சேர்ந்த தங்கவேல் (50), நடராஜா நகரை சேர்ந்த மணிகண்டன் (22), ஈரோடு மாவட்டம், காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த பூர்ணசந்திரன் (23), தட்டான்குட்டையை சேர்ந்த மரியராஜ் (54) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தியது தெரியவந்து. இதையாெட்டி அவர்களை கைது செய்த போலீசார் 1,500 கிலோ ரேசன் அரிசியையும், அதை கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வெற்றிவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story