விசிகே தலைவர் உருவப் படத்திற்கு 59 லிட்டரில் பால் அபிஷேகம்

விசிகே தலைவர்  உருவப் படத்திற்கு 59 லிட்டரில் பால் அபிஷேகம்
X

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உருவப் படத்திற்கு 50 லிட்டரில் பால் அபிஷேகம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17 தொல் திருமாவளவனின் 59வது பிறந்தநாளையொட்டி சென்னை முகலிவாக்கம் 156 வது வட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு காட்சி ஊடகம் அமைப்பாளர் அக்னி புயல் மூ மதன் ராஜ் தலைமையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆலந்தூர் தொகுதி துணை அமைப்பாளர் ப எபியாஸ் 156 வது வட்ட செயலாளர் மா நல்லதம்பி மற்றும் 156 ஆவது வட்ட துணைச்செயலாளர் ஜான் லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் ஜான்சன் மற்றும் வழக்கறிஞர் கவிபாரதி கலந்துக்கொண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் சிறுவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும் முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று உணவும் வழங்கினர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் உருவப் படத்திற்கு 59 லிட்டர் பால் அபிஷேகம் செய்து பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!