மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

வாக்கு பதிவு எந்திரங்களை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணிகள் துவக்கம்.

கரூர் மாநகராட்சியில் 47 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இவை 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 157 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபு சங்கர் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பிறகு வாக்குச் சாவடிக்கு அனுப்பும் பணிகள் துவங்கியது. சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரியில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள், வாக்குப் பெட்டிகளை மறைக்கும் அட்டை உள்ளிட்ட பொருட்களுடன், கொரனோ பரவல் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர்களை பரிசோதிக்க உடல் வெப்ப பரிசோதனை கருவி, மாஸ்க், சானிடைசர், பி.பி.டி கிட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் அனுப்பபடுகின்றன.

17 மண்டலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் அவை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் 398 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மண்டல அலுவலர்களிடம் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் 81 பதற்றமான, 11 மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வெப் ஸ்டீரிமிங் முறையில் சி.சி டி வி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நானும், தேர்தல் ஆணையம் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் பறக்கும்படையினர் 5 லட்ச ரூபாய் வரை பணமும், 1 லட்ச ரூபாய் மதிப்பிலான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரையும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story