/* */

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு 2 ரோந்து வாகனம்; எஸ்.பி., துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து, ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்க புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு 2 ரோந்து வாகனம்; எஸ்.பி., துவக்கி வைப்பு
X

புதிய ரோந்து வாகனத்தை துவக்கிவைக்கும் மாவட்ட எஸ்.பி.,சுதாகர்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நாள்தோறும் பெருகிவரும்‌ வாகனங்கள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளால் அடிக்கடி போக்குவரத்தால் திணறி வருகிறது.

நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் ஏற்கனவே 5 இருசக்கர ரோந்து வாகனங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர ரோந்து வாகனத்தினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி., எம்.சுதாகர் துவக்கி வைத்தார்.

இது குறித்து எஸ்.பி., சுதாகர் கூறுகையில், காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தினை சீராக இருக்கும்பொருட்டும் பொன்னேரிக்கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும், அதேபோல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இரு சக்கர இரண்டு போக்குவரத்து ரோந்து வாகனங்கள் செயல்படும்.

மேலும் இவ்வாகனத்தில் பொது மக்களுக்கு அவசர நிகழ்வுகளை தெரிவித்தல், சாலை வாகன விதிகளை கூறும் ஒலிபெருக்கி, அரசு நெறிமுறைக்களை அறிவித்தல் உள்ளிட்ட வசதிகளும் அடங்கி உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார் .

Updated On: 5 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், கோயில் திருவிழா..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்...!
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற சர்வதேச பள்ளி..!
  4. சிங்காநல்லூர்
    குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட வெள்ளிக்கோல் வரையன் பாம்பு...
  5. சோழவந்தான்
    டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும்
  6. கோவை மாநகர்
    வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார்...
  7. கும்மிடிப்பூண்டி
    ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
  9. பொன்னேரி
    பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து..!
  10. காஞ்சிபுரம்
    நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!