இலவச மருத்துவ பரிசோதனை முகாம் - எம்பி, ஜி.செல்வம் துவக்கி வைத்தார்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம் -   எம்பி, ஜி.செல்வம் துவக்கி வைத்தார்

இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் அருகே இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் எம்பி, ஜி.செல்வம் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் தனியார் நகைக்கடன் நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது.

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் கிராமப்புற மக்களுக்கு சர்க்கரை நோய், சிறுநீரக நோய்களைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமில் ராஜகுளம், சிட்டியம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் , முதியவர்கள் என 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் துணை பொது மேலாளர் ராதிகா, தனியார் தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர்.அபிநயா, வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் தேவேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story