உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மனு அளித்த 627 பேருக்கு, தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வு

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மனு அளித்த 627 பேருக்கு,  தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வு

காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் வேலைக்கேட்டு மனுக் கொடுத்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில்  நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் வேலை கேட்டு மனு அளித்த 627 நபர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது, இதில் ஆர்வமுடன் இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு க ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பெயரில் நிகழ்ச்சி நடத்தினார். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும் அதன் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தொகுதி மக்களிடம் இருந்து குறைகளை மனுவாக பெற்றார். அதில் பெரும்பாலான இளைஞர்கள் இளைஞர்கள் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை தருமாறு மனுக்களை அளித்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் அட்ஸன் பால் நிறுவனம், கெவின்கேர் நிறுவனம் உள்ளிட்ட 7 தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் வேலைக்கேட்ட 627 நபர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது.

அதன்படி இன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் ஆர்வத்துடன் படித்த இளைஞர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story