1,000 யூனிட் வரை இலவச மின்சாரம்; முதல்வருக்கு விசைத்தறி கூட்டமைப்பு நன்றி

1,000 யூனிட் வரை இலவச மின்சாரம்; முதல்வருக்கு விசைத்தறி கூட்டமைப்பு நன்றி

rode news, Erode news today- தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

rode news, Erode news today- 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் சலுகை அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், அமைப்பு செயலாளர் கந்தவேல் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

rode news, Erode news today- விசைத்தறிகளுக்கு 750 லிருந்து 1000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200லிருந்து 300 யூனிட்டாகவும் இலவச மின்சாரத்தை உயர்த்தியும், யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.1.40ல் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டதற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், அமைப்பு செயலாளர் கந்தவேல் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று (சனிக்கிழமை) காலை கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அரசு வழங்கிய சலுகைகளைக் கொண்டாடினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது,

கூட்டமைப்பு கோரிக்கை மற்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இச்சலுகைகள் வழங்கப்படடுள்ளது. இது மாநிலத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகளுக்கு உதவும். கடும்நெருக்கடியில் இருந்த இத்துறைக்கு புத்துயிர் அளிக்கும்.

இது தொடர்பாக, திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வரும் மார்ச் 12-ம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கோர உள்ளதாகவும் தெரிவித்தனர். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி, எம்.பி.சாமிநாதன், எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோருக்கும் இச்சலுகைகளை பெற்று தந்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story