Kalki 2898 AD தெலுங்குல அவரு, மலையாளத்தில் இவரு... அப்ப தமிழ்ல..! மொத்தம் எத்தனை பேருப்பா...?

Kalki 2898 AD தெலுங்குல அவரு, மலையாளத்தில் இவரு... அப்ப தமிழ்ல..! மொத்தம் எத்தனை பேருப்பா...?
X
தென்னிந்திய திரையுலகின் பல்வேறு பிரபலங்களும் கல்கி திரைப்படத்தில் இருக்கிறார்களாம்.

பிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 ஏடி. நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எடுத்திருக்கும் இந்த படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.

600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியிடுகிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். 2டி, 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பங்களில் வெளியிட்டுள்ள இந்த படத்தின் மூலம் குறைந்தபட்சம் 1000 கோடி ரூபாயை திருப்பி எடுக்க வேண்டும் என்கிற கணக்கில் இருக்கிறார்கள் படத் தயாரிப்பு நிறுவனத்தினர்.

பிரபாஸ், தீபிகாவுடன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்துக்கு தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடத்திலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிலும் கமல்ஹாசன் நடித்துள்ள யாஷ்கின் சுப்ரீம் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதுதான் பாகம் இரண்டில் அதகளம் செய்யும் கதாபாத்திரமாம்.


இவர்களுடன் பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர் என்கிற தகவல் முன்னரே கிடைத்துவிட்டது. இவர்கள் டிரைலரிலும் இடம்பிடித்திருந்தார்கள்.

இந்நிலையில், படத்தைப் பார்த்தவர்கள் இன்று திரையரங்கில் பயங்கரமான சர்ப்ரைஸ்களை அனுபவித்துள்ளனர். அதற்கு காரணம் இந்த படத்தில் கேமியோ செய்துள்ள நட்சத்திரங்கள்தான். இந்த படத்தில் கேமியோவாக நடிக்க பல நட்சத்திரங்கள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்த ரகசியத்தை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கேமியோ ரோலில் வரும் நட்சத்திரங்கள் அனைவருமே ஸ்கிரீனில் அதகளம் செய்துள்ளனர். அவர்கள் வரும் இடங்கள் அப்படி இருக்கிறது.

முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர் ஒருவர் என பல சர்ப்ரைஸ்கள் திரையரங்குகளில் காத்திருக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

இந்த படத்தை நீங்கள் இதுவரைப் பார்க்கவில்லை என்றால், இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் மட்டும் மேற்கொண்டு படியுங்கள்.


முதல் நபர்

இந்த படத்தில் கேமியோவாக வரும் இந்த நபர் ஒரு இயக்குநர். வளர்ந்து வரும் இவருக்கு நல்ல எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைத்தது. ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து முன்னணி நடிகரான ஒருவரை வைத்து மொக்கை காமெடி படம் கொடுக்க இப்போது இவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கிறது.

இரண்டாவது நபர்

நேஷனல் கிரஸ்ஸுனு பெயர் வைத்தவங்கள எல்லாம் நேஷனல் கிரஸ்ஸா ஏத்துக்க முடியாதுப்பா. எங்க நேஷனல் கிரஸ் இவங்கதாம்ப்பா என சமீபத்தில் ஒரு காதல் உருக உருக சொல்லிய படத்தின் நாயகியும் இந்த படத்தில் இருக்கிறார். இவருடன் அதே படத்தில் ஜோடியாக நடித்த நடிகரும் இந்த படத்தில் கேமியோ செய்திருக்கிறாராம்.

மூன்றாவது நபர்

நடிகையின் காலில் முத்தமிட்டு சர்ச்சைக்குரிய இயக்குநர், முன்னாள் த்ரல்லர் ஸ்பெஷலிஸ்டும் இந்த படத்தில் வந்து செல்கிறார்.

நான்காம் நபர்

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமான உறவினர்தான் இந்த நபர். இவருக்கு மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், ஹிந்தியிலும் ரசிகைகள் உண்டு.

இன்னும் பல கேமியோக்கள் இருக்கின்றன. இந்த பிரபலங்களை திரையரங்குகளில் பார்த்தால் நீங்களும் நிச்சயம் சர்ப்ரைஸ் அடைவீர்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!