திண்டுக்கல்லில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கைத்தறி ரகங்களை சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜவுளித் தொழிலுக்கு 12% சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவு தொழில் மற்றும் நெசவு சார்ந்த தொழில் புரிவோருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், தமிழக கைத்தறி நெசவாளர் மற்றும் நெசவு உபதொழில் புரிவோர் அனைவரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, கைத்தறி ரகங்களை சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் பொருளாளர் அமலா நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள்,சங்க உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story