/* */

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞர் மீது தாக்குதல்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞர் மீது தாக்குதல்
X

மருத்துவமனை அருகே தாக்கப்பட்ட  இளைஞர் 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சந்தைவெளி பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேலின் உறவினரான சண்முகம், சரத்குமார் இருவருடனும் குடும்ப பகை இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனிவேல் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகராறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பழனிவேல் மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் தலையை துண்டித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். கடலூர் மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பழனிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  3. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  4. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  5. JKKN
    உலக இரத்த கொடையாளர் தின கொண்டாட்டம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  7. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  8. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  9. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  10. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...