ஆடுகளை திருடி, ஆட்டோவில் கடத்திச்சென்ற நபர் கைது

ஆடுகளை திருடி, ஆட்டோவில் கடத்தி சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
Kidnapping News -வழக்கமாக பணம், நகைகளை திருடுவது ஒரு ரகம். விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடி விற்பதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நாட்களில், பட்டாசு விற்பனையை போலவே, 'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனையும் பலமடங்கு எகிறும். அதுபோல, பண்டிகை நாட்களில், அசைவ விரும்பிகள் இறைச்சி கடைகளை மொய்ப்பதால், இறைச்சி விலை பலமடங்கு அதிகரிக்கும். அதுவும், அனைவரும் அதிகம் விரும்பி சுவைக்கும் ஆட்டிறைச்சி விலை, தீபாவளி நேரத்தில் கிலோ ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதை கவனத்தில் கொண்டு, பலே திருட்டு ஆசாமி நபர் ஒருவர், சென்னை கொருக்குப்பேட்டையில் மேய்ந்து கொண்டிருந்த தாய், குட்டி ஆடுகளை திருடி, ஆட்டோவில் ஆடுகளை திருடி சென்ற போது, போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
சென்னை, வியாசர்பாடி எஸ்.ஏ காலனி, ஏழாவது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் என்கிற அத்தர். இவர் நேற்று மாலை சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே குடியிருப்பில் மேய்ந்து கொண்டிருந்த தாய் ஆடு மற்றும் இரண்டு குட்டி ஆடுகளை திருடி, ஒரு ஆட்டோவில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு, வியாசர்பாடி எருக்கஞ்சேரி ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் போலீசார் ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். ஆடுகளுடன் இருந்த அத்தர் மீது சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அத்தர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், போலீசார் அத்தரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அத்தர், கொருக்குப்பேட்டை ரயில்வே குடியிருப்பில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அத்தரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, தீபாவளி பண்டிகை நெருங்கும் இது போன்ற வேளைகளில் ஆடுகளை திருடி, இந்த ஆடுகளை குறைந்த விலைக்கு இறைச்சி கடை வைத்திருப்பவர்களிடம் விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை ஆண்டுதோறும் தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், இது போன்ற ஆடுகளுக்கு நல்ல மவுசு இருப்பதால் அதனை நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதை தொழிலாக கொண்டு இது போன்ற திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து அத்தரை கைது செய்த சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் குற்றப்பிரிவு போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார், ஆடுகள் திருடிய அத்தரையும், மூன்று ஆடுகளையும் கைப்பற்றி, கொருக்குப்பேட்டை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
வியாசர்பாடியில் ஆடுகளை திருடி ஆட்டோவில் கடத்தி சென்ற நபர் பிடிபட்டது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu