ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்
X
ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட் இது, என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று தாக்கலான பட்ஜெட், தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க பட்ஜெட் ஆகும்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்குப் போனது. அதிலும் குறிப்பாக நிதித்துறை அடைந்த மிகமோசமான நிலைமை என்பது கவலைக்கிடமானது ஆகும். நிதிநெருக்கடியான நிலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், கடந்த காலக் கசப்புகளை சமாதானமாகச் சொல்லிக் கொள்ளாமல், பல்வேறு ஆக்கபூர்வமான உதவிகளை மக்களுக்கு திமுக அரசு செய்தது.

இருக்கும் நிதியை முறைப்படி கையாளுதல், தேவையான செலவினங்களை மட்டும் செய்தல், வருவாயை அதிகப்படுத்துதல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் ஆகிய திட்டமிடுதல்களின் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகமாகி உள்ளது. செலவு குறைந்துள்ளது. அதை விட முக்கியமாக வருவாய்ப் பற்றாக்குறை என்பதும் குறைந்துள்ளது.

மாநிலத்தின் வரி வருவாய் பாதித்த நிலையிலும் இந்தச் சாதனை செய்யப்பட்டுள்ளது. இதே 'திராவிட மாடல்' பாணி தொடரும் என்பதையும், பட்ஜெட் உணர்த்துகிறது.

இந்த பட்ஜெட் என்பது ஒரு மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம் என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழகம் என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன்.

பத்தாண்டு காலச் சரிவைச் சரிசெய்வது மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நூற்றாண்டு கால திராவிட - சமூகநீதிக் கொள்கைகளையும், இக்கால நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai in future agriculture