இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை

பைல் படம்

செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

செந்துறை அடுத்த நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(50). இவர், நேற்று முன்தினம் இரவு செந்துறையில் உள்ள தனது ஜவுளிக்கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நல்லாம்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

செந்துறை அடுத்த சமத்துவபுரம் அருகே செல்லும் போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பழனியம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story