பொற்கால ஆட்சி தந்த காமராசர்..! அவர் புகழ் பாடுவோமே..!

பொற்கால ஆட்சி தந்த காமராசர்..! அவர் புகழ் பாடுவோமே..!
X
2 Minute Speech About Kamarajar in English-தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியில் இருந்த காலம் பொற்காலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

2 Minute Speech About Kamarajar in English-கல்விக்கண் திறந்த காமராசர் என்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். குமார ஸ்வாமி காமராஜ், காமராஜா என்று பிரபலமாக எல்லோராலும் அறியப்பட்டவர். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி.


தீவிர அரசியல்

காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் வறுமையால் வாடியது. அதனால், அவரால் பள்ளிப்படிப்பை தொடரமுடியவில்லை. 1920ம் ஆண்டில் அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.


தமிழக முதலமைச்சர்

1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.அவர் முதலமைச்சராக இருந்தபோது பல வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிவகுத்தார். கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டினார். ஏழை குடும்பத்து குழந்தைகள் உணவு இல்லாததால் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த காமராசர், முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2 minute speech about kamarajar in tamilkama


மகத்தான பணிகள்

விவசாயத்தில் தன்னிறைவு பெற பல அணைகளை கட்டியவர். தமிழ்நாட்டுக்கு பல பெரிய தொழிற்சாலைகள் வர அவரே காரணமாக இருந்தார். விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

1976ம் ல் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. தனக்கென எந்த சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளாத ஒரு உன்னத தலைவன், காமராசர். நாட்டுக்காகவே வாழ்ந்தவர். நாட்டுக்காகவே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர். அரசியல் பயணத்தில் அவர் ஒரு கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டவர்.


பொற்கால ஆட்சி

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது.

தன் வாழ்நாளில் மக்களுக்கான பல மகத்தான திட்டங்களை செயல்படுத்திய காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தனது 72வது வயதில் காலமானார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி