திருவண்ணாமலை போதைப்பொருள் ஒழிப்பு தினம்; மரக்கன்றுகள் நடுதல்

திருவண்ணாமலை போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை ஆட்சியர் நட்டு வைத்தார்.

Update: 2024-06-27 11:05 GMT

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மரகன்று நட்டு வைத்தார்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்டசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாவட்ட கல்வித் துறை மற்றும் லைப்லைன் ட்ரஸ்ட் இணைந்து போதை பொருள் ஒழிப்பு தினம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாதாக, போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, காவல் துணை கண்காணிப்பாளர் (கலால்) ரமேஷ்குமார்மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News