திருத்தணி முருகன் கோயில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து கோயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-10-07 16:21 GMT

ஊதியம் வழங்காததை கண்டித்து கோயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்  

திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் இருபத்தி ஒன்பது உப கோயில்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக, ஒப்பந்த அடிப்படையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருத்தணி முருகன் மலைக்கோயில், தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததால் இன்று 80க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மலைப் பாதை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தொழிலாளர்களிடம் உரிய அலுவலர்களுடன் பேசி உங்களுக்கான ஊதியத்தை விரைவில் வழங்கப்படும் என சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News