திருத்தணி கோவிலில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருத்தணி கோயிலில் ராஜ கோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2022-03-31 15:55 GMT

ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான பணிக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு; தமிழகம் முழுவதும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை அனைத்தும் கையகப்படுத்தப்படும். திருத்தணி முருகன் கோவிலில், நீண்ட நாட்களாக பக்தர்களுடைய கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும்,  பக்தர்கள் தங்கக்கூடிய அறைகளும் சேதமடைந்து காணப்படுவதால், அதனை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News