திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.;

திருத்தணி கோவில் உண்டியல் எண்ணும் பணி
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது. கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
உதவி ஆணையர் ரமணி முன்னிலை வகித்தார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதில் 21 நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 28 ஆயிரத்து 857 கிடைத்தது. மேலும் தங்கம் 645 கிராம், வெள்ளி 6,950 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.