மின் கசிவு காரணமாக மரக்கடை எரிந்து சேதம்

திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதி;

Update: 2021-05-12 06:53 GMT

தீப்பிடித்து எரியும் மரக்கடை.

திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் மின் கசிவு காரணமாக மரக்கடை எரிந்து நாசம்; திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவேற்காடு அடுத்த மேலும் அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன் (31) இதே பகுதியில் வீட்டு உபயோக கட்டுமானத்திற்கான மரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார்.இவரது கடையில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அங்கிருந்த மரப் பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுக்குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News