கணவன் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மதுரவாயில் அருகே கணவன் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-27 06:10 GMT

மதுரவாயில் அருகே கணவன் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தூக்கிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜூ  (வயது 34 ).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி( 29 )இவர்களுக்கு தரணீஸ்வரன் என்கிற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நினைவில் கணவர் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக கணவன் மனைவி இடையே பல நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் கலைச்செல்வி. இந்நிலையில்  நேற்று மாலை கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜூ வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர்  ராஜூ வீடு திரும்பி வீட்டுக்குள் வந்தார். அப்போது ராஜூ சமையலறையில் சென்று பார்த்த போது கலைச்செல்வி தன் சேலையில் தூக்கிட்டு உயிருக்கு போராடிக் கொண்ட நிலையில் இருந்துள்ளார். உடனடியாக ராஜூ அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலைச்செல்வி ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயில் போலீசார் அங்கு விரைந்து சென்று கலைச்செல்வி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் கணவரின் நடத்தையில் சந்தேக காரணத்தினால் கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News