பூந்தமல்லி அருகே குடிபோதையில் தகராற செய்த கணவனை கொன்ற மனைவி கைது

பூந்தமல்லி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-04 07:44 GMT

கொலை செய்யப்பட்ட சீனிவாசன்.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை குத்திக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்( வயது 35), தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி( வயது 30), பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய சீனிவாசன் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வந்த சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் பலமாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.


இதையடுத்து நசரத்பேட்டை காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கணவனை குத்தி கொலை செய்த ஊர் காவல் படையை சேர்ந்த அவரது மனைவி மங்கள லட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவியே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News