வானகரம் மீன் மார்க்கெட்டில் இனி மொத்த விலையில் மட்டுமே விற்பனை

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரவேண்டாம்; மொத்த விலையில் மட்டுமே இனி விற்பனை- வியாபாரிகள் அறிவிப்பு.

Update: 2021-05-17 13:22 GMT

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீன் மார்க்கெட்டுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய மீன் சந்தையான வானகரம் மீன் மார்க்கெட்டில் இனி சில்லறை விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை கூறியதாவது:- கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இனி மொத்த விலையில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யவும், சில்லரை விற்பனை போக்கை நிறுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே நிலைமை சீரடையும் வரையில் இனி பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு மீன்கள் வாங்க நேரில் வர வேண்டாம்.

வியாபாரிகள் மற்றும் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து மீன்கள் வாங்கி செல்லலாம். மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் என்பதால் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகம் எடுத்துள்ளது. பொது மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News