மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான மாற்று திறனாளிகளுக்கு அகில இந்திய தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்;
அகில இந்திய தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி மாங்காடு அருகே நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதனை இடைவெளியுடன் நின்று வாங்கிச் சென்றனர்.இதேபோல் அனைவருக்கும் கபசூரக் குடிநீர் வழங்கப்பட்டது.