திருவள்ளூர் அருகே மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
திருவள்ளூர் அருகே மின்வெட்டை கண்டித்து தாமரைப்பாக்கம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.;
திருவள்ளூர் அருகே மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் இரவில் போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் அருகே தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட தாமரைப்பாக்கம் கிராம மக்கள் திடீர் என சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு காரணத்தினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 100.க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆவடி- பெரியபாளையம். தாமரைப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை ே போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார், வெங்கல் காவல்துறை ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் போலீசார். பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே தாமரைப்பாக்கம் பகுதியில் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும். தாங்கள் பகல் முழுவதும் வேலைகளுக்கு சென்று இரவு நேரங்களில் நிம்மதியாக வீட்டில் தூங்க முடியவில்லை என்றும் மின்வெட்டு காரணத்தினால் குழந்தைகள் பெண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், மின்வெட்டு சரி செய்யுமாறு பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், நேரில் சென்று மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
உடனடியாக இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் ஆவடி -பெரியபாளையம் சாலையில் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.