வானகரத்தில் காணாமல் போன பெண், கை, கால்கள் கட்டப்பட்டு எரித்து கொலை:கணவன் தான் கொலையாளியா போலீஸ் விசாரணை
வானகரத்தில் காணமல் போன பெண், கை, கால்ககள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.கணவன்தான் கொலையாளியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
,மதுரவாயல் அருகே வானகரம், கணபதி நகரை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ரேவதி வானகரத்தில் உள்ள தனியார் கம்பனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியை காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நொளம்பூர் அருகே தாம்பரம் புறவழிச் சாலையில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக நொளம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணயைில் வானகரத்தில் காணமல் போன ரேவதியின் சடலம் என தெரியவந்தது. நேற்று இரவு ரேவதியின் சடலம் இருந்த புதரில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரில் மதுரவாயல் தீயணைப்புதுறையினர் தீயை அனைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சடலம் இருப்பதை கவனிக்காமல் சென்றுள்ளனர் .
ரேவதி கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லமால் வீட்டில் இருந்துள்ளார். இதனால்முருகன் மனைவி ரேவதியை கொலை செய்துவிட்டு நாடமாடி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து உள்ளனர்.
இதனால் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ரேவதியை வேறு யாரவது கொலை செய்துவிட்டு சடலத்தை வீசி சென்றனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.