செயினை அறுத்த மர்ம நபர்கள்; போராடி மீட்ட பெண்ணின் வீடிேயா வைரல்

பூவிருந்தவல்லியில் வழிப்பறி செய்ய வந்த மர்ம நபர்களிடம் போராடி பெண் ஒருவர் தங்க நகையை மீட்ட சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.;

Update: 2021-08-01 16:04 GMT

சிசிடிவி காட்சி.

சென்னை, பூவிருந்தவல்லி, கந்தசாமி நகர் பிரதான சாலையில் நடந்து சென்ற சரண்யா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் தாலி சங்கலியை அறுக்க முயற்சி செய்தனர். அப்போது சரண்யா சுதாரித்துக் கொண்டு தங்க சங்கிலியை இறுக்கமாக பற்றி கூச்சலிட்டார்.

இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தங்க சங்கிலியை மீட்க பெண் போராடிய காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News