பட்டாகத்தியை கட்டி மிரட்டி டாஸ்மார்க் பாரில் கொள்ளை, 2 பேர் கைது

குமணன்சாவடியில் பட்டாகத்தியை காட்டி, மிரட்டி, டாஸ்மார்க் பாரில் இருந்த மதுபாட்டில்களை தூக்கி சென்ற, மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-22 17:42 GMT

பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பாரில் மது பாட்டில்களை பறித்து சென்றவர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் ஒரே இடத்தில் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள பார்களில் கள்ள சந்தையில் சிலர் மதுபானங்கள் விற்று வந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டிமிரட்டினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து ஒரு பெட்டி மதுபாட்டில்கள், மதுவை விற்றுக்கண்டிருந்த நபரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தெரிவித்ததை அடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தின் படி கரையான்சாவடியில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது போலீசாரை தள்ளிவிட்டு அந்த நபர்கள் ஓடினர். போலீசார் விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.

 விசாரணையில் அவர்கள் குமணன்சாவடி சேர்ந்த முபாரக், ரபீக்  என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து 2  பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளச்சந்தையில் மது விற்றதாக மேலும் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News