ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம்:அமைச்சர் நாசர் திறப்பு

துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையை அமைச்சர் பார்வையிட்டார்

Update: 2022-01-01 02:00 GMT

பூந்தமல்லி சென்னீர்குப்பம் ஊராட்சியில் புதிதாக துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்தார்

பூந்தமல்லி சென்னீர்குப்பம் ஊராட்சியில் புதிதாக துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக புதிதாக.ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  துணை சுகாதார நிலையத்தை  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு நாசர்  திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையை  அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி,   சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செந்தில் குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார்,  ஒன்றிய குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், மருத்துவத் துறை அலுவலர்கள் மற்றும் சென்னீர்குப்பம் ஒன்றிய கவுன்சிலர் டில்லி குமார், செந்நீர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரி அன்பு,, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜ் 4.வது வார்டு செயலாளர் ஆர்த்தி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News