சாலையில் தவித்த துப்புரவு பணியாளர்; உதவிக்கரம் நீட்டிய ஜுமாட்டோ ஊழியர்!
பூந்தமல்லியில் வீட்டிற்கு செல்ல வாகன வசதி இல்லாமல் தவித்த துப்புரவு பணியாரை வீட்டில் விட்ட ஜுமாட்டோ பணியாளர்.;
சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் 2 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடும் இவர்கள் ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து இல்லாத நிலையில் சொந்த வாகனம் இல்லாதோர் வீட்டுக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் பணி முடிந்து நகராட்சி அருகே நீண்ட நேரமாக சாலையில் செல்லும் வாகனத்தை மடக்கி லிப்ட் கேட்ட நிலையில் கொளுத்தும் வெயிலில் நின்று இருந்தார். சுமார் 20க்கும் மேற்பட்டோர் அவரை கடந்து சென்ற நிலையில் ஒருவர் கூட நிறுத்தி ஏற்றி செல்லவில்லை.
துப்புரவுத் தொழிலாளி என்பதால் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் கூட நிறுத்த மறுத்த நிலையில் அவ்வழியே வந்த ஜூமாட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்று சென்றார்.
20க்கும் மேற்பட்டோர் தவிர்த்து நிலையில் ஜூமாட்டோ உணவு ஊழியர் ஒருவர் அவருக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..