மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

Tamil Nadu Temple News- மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் தீ மிதி திருவிழா மிக விமரிசயைாக நடைபெற்றது.

Update: 2022-07-05 04:45 GMT

மாகரல் கண்டிகை பொன்னியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

Tamil Nadu Temple News- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன் ஆலய திருவிழா கடந்த 21.ஆம் தேதி தொடங்கி நாகூர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கூழ் வார்த்தல் பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தல் கும்பம் படைத்தல் அம்மன் மாலை திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த24.ஆம் தேதி அன்று திரௌபதி அம்மன் கோவிலில் தர்மராஜாதூவாரோஜன் ஸ்தம்பம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி அன்று கிராமத்தைச் சேர்ந்த 105 பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இரவு 7.மணி அளவில் பகாசூரன் சம்ஹாரம் பாஞ்சாலி அர்ஜுனன் திருக்கல்யாணம் சீர்வரிசையோடு நடைபெற்றன அம்மன் திருவீதி உலா நச்சுக்குழி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை காப்பு கட்டி 10 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் புனித நீராடினர். இதில் உற்சவர் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீகுண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News