வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்
வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த மெய்யூரில் தனியார் நிலத்தில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மாற்று இடத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதிக ஆழம் மணல் அள்ளப்படுவதாகவும் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகளுக்கும் வெங்கல் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர் இந்தப் புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மாற்று இடத்தில் மணல் கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 11 லாரிகளையும், 5 ஜேசிபி இயந்திரங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து லாரிகளை வெங்கல் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் லாரி ஓட்டுlர்கள் இது குறித்து கூறுகையில், தாங்கள் முறையாக பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு பிறகுதான் மணலை ஏற்றிக் கொண்டு வந்தோம் வரும் வழியில் போலீசார் திடீரென எங்கள் வாகனங்களை வழிமறித்து ஆவணங்களை காட்டும்படி கேட்டனர். சரியான ஆவணங்களையும் ரசீதை காட்டியும் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து எங்களை அலைக்கழிகக வைக்கின்றனர். இதுபோன்று போலீசார் பொய் வழக்கு திரும்ப பெறாவிட்டால் லாரி சங்கங்களை திரட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.