சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் எம்.ஏ.சி. நகரை பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பார்த்திபன். இவரது மகள் பவானி(14) குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், பார்த்திபன் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். வீட்டில் அருகே இருக்கும் அக்கம்பக்கத்தினர் பவானியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர் அப்போது அவளை பரிசோதித்த மருத்துவர் பவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.