பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் : கொரோனா பரவும் அபாயம்
பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
கொரோனாவின் 2ம் அலையின் தாக்கத்தில் ஏராளமானோர் இறந்து போன நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இருப்பினும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் இடங்களில் பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கை சற்றும் பின்பற்றாமல் பூந்தமல்லியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியிறி திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இங்கு திரண்டு மக்களின் காட்சியை காணும்போது பத்திரப்பதிவு செய்ய வந்தது போல அல்லாமல் கொரோனாவை மொத்தமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலை போலக் காட்சியளித்தது.
அரசு அலுவலகங்களில் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,
பூந்தமல்லி உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை சற்றும் பின்பற்ற பின்பற்றாமல் மேலும் சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.