பூவிருந்தவல்லியில் இருசக்கர வாகனம் விபத்து; எம்எல்ஏ கிருஷ்ணசாமி உதவி!

பூவிருந்தமல்லி ஜி.ஆர்.டி அருகில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்தவருக்கு கிருஷ்ணசாமி எம்எல்ஏ உதவினார்.;

Update: 2021-05-25 07:03 GMT
பூவிருந்தவல்லியில் இருசக்கர வாகனம்  விபத்து; எம்எல்ஏ கிருஷ்ணசாமி உதவி!

விபத்துக்குள்ளான வாலிபருக்கு கிருஷ்ணசாமி எம்எல்ஏ உதவிய காட்சி.

  • whatsapp icon

திருவள்ளூர் நகரத்திலிருந்து பூவிருந்தவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் பூவிருந்தவல்லி ஜி.ஆர்.டி அருகில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பொழுது அவ்வழியாக சென்று கொண்டிருந்த பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, உடனடியாக வண்டியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டு, காயம் ஏற்பட்ட நபரை உடனடியாக மீட்டு முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனது வாகனம் மூலம் அனுப்பிவைத்தார்.

பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியின் இத்தகைய செயல் பொதுமக்களால் தற்பொழுது பாராட்டப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News