பூந்தமல்லி: கொரோனா தடுப்பூசி இங்கே... சமூக இடைவெளி எங்கே...?

நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடவந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-05-26 13:15 GMT

சமூக இடைவெளியை மறந்து கொரோனா தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர், சுகாதார மையத்திற்கு அப்பகுதியினர் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நின்றபோது மக்கள் ஒருவரையொருவர் முந்தியடித்துக் கொண்டு நின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தாத சுகாதாரத் துறையினரின் இச்செயல் வேதனை அளிப்பதாக இருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News