பூந்தமல்லி லாரியின் சக்கரம் கழன்று மோதிய விபத்து வாலிபர் பலி
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் லாரியின் சக்கரம் கழன்று மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து லிங்க ராஜ் (29) இவர் வண்டலூரை அடுத்த கண்டிகையில் தங்கி ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மதியம் தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலையில் மதுரவாயல் அருகே பைக்கில் நிறுத்தி சிறுநீர் கழித்தார். அப்போது மதுரவாயல் நோக்கி வந்த லாரியின் பின்பக்கத்தில் உள்ள சக்கரம் ஒன்று கழன்று திடீரென முத்து லிங்க ராஜ் மீது வேகமாக மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஸ்ரீதர் என்பவரை மதுரவாயல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.