பூந்தமல்லி: திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு நகராட்சி விழிப்புணர்வு

பூந்தமல்லி நகராட்சியில் திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங்களில் குப்பை கொட்டாமல் இருக்க மரக்கன்றுகளை நட்டு நகராட்சி அதிகாரிகள் நூதன விழிப்புணர்வு.

Update: 2021-07-20 17:47 GMT

பூந்தமல்லி நகராட்சியில் திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி அதிகாரிகள் 

திருவள்ளூர் பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. குறிப்பாக  கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அடுத்தபடியாக பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக பூந்தமல்லி இருக்கின்றது. பேருந்து நிலைய வளாகம் சுற்றிலும் சாலை ஓரங்களிலும் பொதுமக்கள் மற்றும் தனியார் கடை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் குப்பைகளை கொட்டி வந்தனர். அதுமட்டுமின்றி மக்கள் வசிக்கும் இடங்களில் திறந்த வெளியிலும் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் வகையில், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன் தலைமையில் குப்பைகளை கொட்ட வந்த இடங்களில் முழுமையாக தூய்மை செய்து வேம்பு, புங்கை, தேக்கு போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அதேபோல மரக்கன்றுகள் சுற்றி அமைந்துள்ள வேலிகளில் பொதுமக்கள் இங்கே குப்பைகளை கொட்ட வேண்டாம், மரம் வளர்ப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News