பூந்தமல்லி:2வதுஆம்புலன்ஸ் வாங்க தமுமுகவினருக்கு குடும்பத்தினர் நன்னொடை

பூவிருந்தவல்லியில் தமுமுகவினர் 2-வது ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தினர் நன்கொடை வழங்கினர்.;

Update: 2021-05-24 12:36 GMT

ஆம்புலன்ஸ் வாங்க நிதிஉதவி அளித்த குடும்பத்தினர்.

oதமுமுகவின் சேவையை பாராட்டி குமனன்சாவடியைச் சேர்ந்த ஜெய்துன் பாத்திமா சகோதரிகளின் குடும்பத்தின் சார்பாக பூவிருந்தவல்லி நகர தமுமுகவின் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக ரூ. 5600 ஐ நகர தலைவர் காஜாமைதீனிடம் வழங்கினார்கள். இவர்கள் கடந்த ஆம்புலன்ஸ் வாங்கவும் உதவியுள்ளனர் என்பதும குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் டி.எம்.எம். ஷேக் தாவூத், நகர பொருளாளர் ராஜா உசைன், 16வது வார்டு தமீமுன் அன்சாரி, 16வது வார்டு தமுமுக செயலாளர் சவுக்கத்அலி, 10வது வார்டு துணைச் செயலாளர் தமீமுன் அன்சாரி ஆகியோர்கள் உடனிருந்தனர். மேலும் கடந்த 21ஆம் தேதியன்று கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை சி.எஸ்.ஐ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் சகோதரி அவர்களும் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக ரூ. 5000 வழங்கினார்கள்.

Tags:    

Similar News