கோடுவெளி ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பூந்தமல்லி எம்.எல்.ஏ வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளி ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்.

Update: 2022-01-09 02:45 GMT

பொங்கல் பரிசுத் தொகுப்பினை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்.

பெரியபாளையம் அருகே குருவாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளி ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கோடுவேளி ஊராட்சி காரணி, ஆரிக்கபேடு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி திராட்சை ஏலக்காய் கரும்பு உள்ளிட்ட21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க.  செயலாளர் கோடுவேளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசுவாமி கலந்து கொண்டு 1,122 குடும்ப அட்டைதாரர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி தொகுப்பினை வழங்கினார். பின்னர் கோடுவேளி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். இதனை அடுத்து காரணி பகுதியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தார்.  குருவாயல் பகுதியில்  மழையினால் பாதிப்புக்குள்ளான சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோடுவேளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வி.ஜே சீனிவாசன், எம்.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனுசாமி, ஜி.பாஸ்கர், கே.ஜி.அன்பு, டீ.பாஸ்கர்,நாகலிங்கம், லோகநாதன்,சீனு, சுப்ரமணி, கோடுவேளி எங்க இருக்க மச்சி மன்ற துணை தலைவர் ஏ.கே. எம்.சரத்குமார் கிளை செயலாளர்கள் கணேசன், கஜேந்திரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News