பூந்தமல்லி அருகே எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
பூந்தமல்லி அருகே தலை மற்றும் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை.;
பூந்தமல்லியை அருகே பாரிவாக்கத்தில் இருந்து கன்னபாளையம் செல்லும் சாலையின் அருகே சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டப்பட்டு எரித்து வருவது வழக்கம்.
இதனையடுத்து அந்த குப்பைகளுக்கு அருகில் சாலையை ஓரத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவரின் தலை, மற்றும் 2 கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் பார்வையிட்டனர். பாதி எரிந்த நிலையில் இருந்த வாலிபர் உடலை மீட்டு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் தலை மற்றும் 2 கைகளை துண்டித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலை மட்டும் இங்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்து உள்ளனர். கொலையான வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகள் எங்கு வீசப்பட்டு உள்ளது? என அந்த உடல் பாகங்களையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாயமானவர்கள், சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய புகார்கள் குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். நண்பர்களுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்குமா அல்லது வேறு எங்காவது அந்த வாலிபரை கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தலை, கைகளை துண்டித்து வேறு எங்கோ வீசிவிட்டு, உடலை இங்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.