பூந்தமல்லி அருகே போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர்
மகன் மருத்துவம் படித்திருக்கும் நிலையில் அவரது பெயரை வைத்துக் கொண்டு தந்தை போலி மருத்துவராக வலம் வந்துள்ளார்;
வெங்கல் பஜார் பகுதியில் பி யு சி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ராமச்சந்திரன்(71) என்பவரை கைது செய்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம் தாமரைப்பாக்கம் அடுத்த வெங்கல் பஜார் பகுதியில் மகன் மருத்துவம் படித்து வந்திருக்கும் நிலையில், அவரது பெயரில் கிளினிக் வைத்து அவரது தந்தை ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக பல்வேறு புகார்கள் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோவனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத் துறையினர் அப்போது பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை செய்தனர்.
அவர் அதே வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பி யூ சி வரை மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும். அவரது மகன் மருத்துவம் படித்து முடித்து இருக்கும் நிலையில், அவரது பெயரில் கிளினிக்கை தந்தை மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவரிடம் இருந்து ஸ்டெதஸ்கோப். தர்மா மீட்டர் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு செய்யப்பட்டு வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகன் மருத்துவம் படித்திருக்கும் நிலையில் அவரது பெயரைப் பயன்படுத்தி அவருடைய தந்தை போலி மருத்துவராக வலம் வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.