பாரிவாக்கம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!

பாரிவாக்கம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்தார்.

Update: 2021-06-19 12:47 GMT

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசிகளை செலுத்தி வரும் சூழ்நிலையில் பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தும் பணியைப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனையை பொதுமக்களுக்கு திறந்துவைத்து கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை பார்வையிட்டு அதன் பணியை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News