பனிமலர் கல்விக்குழுமம் சார்பாக கொரோனா நிவாரண நிதி

பூவிருந்தவல்லியில் உள்ள பனிமலர் கல்விக்குழுமம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-14 06:13 GMT

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பூவிருந்தவல்லியில் செயல்படும் பனிமலர் மருத்துவக்கல்லூரி கொரோனா நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் நிதியை கல்விக்குழுமத் தலைவர் சின்னதுரை, இயக்குனர்கள் சக்திகுமார், சரண்யா சக்திகுமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.

இதேபோல் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 70 படுக்கைகளை அரசுக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளது போல் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 50 படுக்கைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News