பூவிருந்தவல்லி: தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பூவிருந்தவல்லி பணிமனையில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி துவங்கி வைத்தார்.

Update: 2021-06-05 13:52 GMT

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்  ஆலோசனைப்படியும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தமிழ்நாடு பூவிருந்தவல்லி போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லி நகரக் கழகச் செயலாளர் பூவை ரவிக்குமார், பூவிருந்தவல்லி திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News