போக்குவரத்து துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

மதுரவாயில் போக்குவரத்து துணை ஆய்வாளர் குமார் கொரோனாவுக்கு பலி.;

Update: 2021-04-27 08:15 GMT

போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார் மதுரவாயில் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குமார் பரிதாபமாக இறந்து போனார். அவரது உடல் இன்று அபிராமபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவால் இறந்துபோன சப் இன்ஸ்பெக்டருக்கு ஹேனா என்ற மனைவியும், மோனிகா, டென்செல் என்ற மகனும் உள்ளனர். 

கொரோனா தாக்கத்தால் போலீசார் இறந்து வரும் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News