திருமழிசை கூட்டுரோடு அருகே லாரி மோதி இளம் பெண் உயிரிழப்பு

திருமழிசை கூட்டு ரோடு அருகே லாரி மோதியதில் இளம் பெண் உயிரிழப்பு.;

Update: 2021-07-20 16:21 GMT

பூந்தமல்லி அடுத்த பாப்பன்சத்திரம் சேர்ந்தவர் தாரணி (23) தனியார் நிறுவன ஊழியர். இவர் திருமழிசை  கூட்டு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தாரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் பிரகாஷ் (32) என்பவரை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News