வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து பூந்தமல்லி நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-21 07:45 GMT

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய புதிய 3 குற்றவியல் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பூந்தமல்லி நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார் . இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது புதிதாக கொண்டுவரப்பட உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள், கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் . வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News