வெங்கல் அருகே லக்ஷ்மி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
வெங்கல் அருகே லக்ஷ்மி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆரக்கம்ப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமதி திருவிழா முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி அன்று திருவிழா தொடங்கி 20.நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்.
நிகழ்ச்சியை முன்னிட்டு மகாகணபதி மற்றும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் உற்சவம் நடைபெற்றது.
கடந்த 10.ஆம் தேதி அன்று லக்ஷ்மி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கிராமத்தைச் சேர்ந்த 250 பக்தர்கள் 10 நாட்கள் காப்புகட்டி விரதமிருந்து நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றில் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து முடித்த பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட லட்சுமி அம்மன் டிராக்டர் மூலம் வைத்து புனித நீராடும் இடத்திலிருந்து பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆலயம் வந்த பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தாங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி பின்னர் அம்மனை வழிபட்டனர்.
அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.